இறைபதமடைந்த கர்தினால் Pham Minh Mân அவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரத்தின் ஓய்வுபெற்ற பேராயரான கர்தினால் John Baptist Pham Minh Mân அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 26, வியாழனன்று, பேராயர் Joseph Nguyễn Năng அவர்களுக்கு அனுப்பிய இந்தச் செய்தியில், வியட்நாமின் தலத்திருஅவைக்கு கர்தினால் Pham Minh Mân ஆற்றிய பல ஆண்டுகால அர்ப்பணிப்பு நிறைந்த பணியை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அவ்வுயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மேலும் இறைபதம் அடைந்த கர்தினால் Pham அவர்களின் மேய்ப்புப் பணி, சமூகப் பொறுப்புணர்வு மீதான அர்ப்பணிப்பு, உரையாடல் மற்றும் தலத்திருஅவையின் ஒன்றிப்பை ஊக்குவித்தல் மற்றும் அவரது பணிவான மற்றும் எளிமையான வாழ்க்கையைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, துயருறும் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியுள்ள திருத்தந்தை, உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கையில் ஆறுதலையும் அமைதியையும் அளித்து தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
