புனிதர்பட்ட படிநிலையின் ஆணைக்குத் திருத்தந்தை ஒப்புதல்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆறு தனிநபர்களின் வீரத்துவ பண்புகளையும், கத்தோலிக்க விசுவாசத்தின் மீதான அவர்களது பற்றுதலையும் அங்கீகரித்து, அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ஆணைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 23, திங்களன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவர்களில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஆயரான இறைஊழியர் லூடோவிகோ அல்டியேரி; ஆதரவற்ற சிறுவர்களுக்கான Boys Town அமைப்பின் நிறுவனரான இறைஊழியர் எட்வர்ட் ஜோசப் பிளநேகன்; மற்றும் Teams of Our Lady அமைப்பின் நிறுவனரான இறைஊழியர் ஹென்றி காஃப்பரெல் ஆகியோரும் அடங்குவர்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட மற்ற நபர்களில் போலந்தில் பிறந்த துறவி ஸ்டானிஸ்லாவா சாமுலோவ்ஸ்கா, ஸ்பெயின் நாட்டுத் துறவி மரிய ஆஃப் பெத்லகேம் ரொமேரோ அல்காரின் மற்றும் இத்தாலிய இல்லறவாசி ஜோசப் காஸ்டக்னெட்டி ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் ஒவ்வொருவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வணக்கத்திற்குரிய இறைஊழியர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இது அருளாளர் மற்றும் புனிதர் நிலையை நோக்கிய சாத்தியமான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இவர்களின் பாரம்பரியம், தலைமுறைகள் மற்றும் நாடுகள் கடந்து இறை நம்பிக்கை, தியாகம் மற்றும் வீரத்துவப்பண்புகளைப் பறைசாற்றுகிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
