காஸ்தல் கந்தோல்போவில் முதியோருடன் திருத்தந்தை (கோப்புப் படம்) காஸ்தல் கந்தோல்போவில் முதியோருடன் திருத்தந்தை (கோப்புப் படம்)  (ANSA)

6-வது உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாளிற்கான கருப்பொருள் அறிவிப்பு!

தலத்திருஅவைகள் மற்றும் அமைப்புகள் ஆறாவது உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாளைக் கொண்டாட உதவும் வகையில், மேய்ப்புப் பணி சார்ந்த தரவுகளை வழங்க பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத் துறை திட்டமிட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்" (எசா 49:15) என்ற இறைவார்த்தையை, ஆறாவது உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாளிற்கான கருப்பொருளாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத் துறை அறிவித்துள்ள அறிக்கையொன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறுவப்பட்ட உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாள் ஜூலை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை புனிதர்கள் சுவக்கீன் மற்றும் அன்னாள் ஆகியோரின் விழாவன்று வருகிறது.

இவ்விழாவினை, நற்கருணை வழிபாட்டுடன் கொண்டாடவும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் முதியவர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டவும் உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்களை ஊக்குவித்துளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இவ்விழாவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவிவிலிய வார்த்தை, குறிப்பாக தனிமையை அனுபவிக்கும் வயதானவர்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆறுதலின் செய்தியாக அமையும் அதேவேளையில், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் அவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் நினைவூட்டுகிறது.

மேலும் தலத்திருஅவைகள் மற்றும் அமைப்புகள் இந்த நிகழ்வைக் கொண்டாட உதவும் வகையில், மேய்ப்புப் பணி சார்ந்த தரவுகளை வழங்க பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 பிப்ரவரி 2026, 13:02