இத்தாலியில், 5 இலட்சம் மக்கள் சுகாதார வறுமை நிலையில் வாழ்கின்றனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இத்தாலியில், ஐந்து இலட்சம் மக்கள் சுகாதார வறுமை நிலையில் வாழ்கின்றனர் என்றும், பிப்ரவரி 10 முதல் 16 வரை, மருந்து சேகரிப்பு நாட்களில், மருந்தகத்தில் ஒரு மருந்தை நன்கொடையாக வழங்குவதன் வழியாக அவர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 10, செவ்வாயன்று வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, சேகரிக்கப்பட்ட மருந்துகள் இத்தாலி முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு மற்றும் உதவி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும், இதன் வழியாக அவை தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Pharmaceutical Collection Days என்பது பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான மருந்துகளை (மருந்துப் பொருட்கள்/மாத்திரைகள்) பாதுகாப்பான முறையில் பொதுமக்களிடமிருந்து அகற்றுவதற்காக சேகரிக்கும் நாட்களை இது குறிக்கிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
