திருத்தந்தையுடன் அருள்சகோதரி. நினா பெனடிக்டா கிராபிக், MVZ திருத்தந்தையுடன் அருள்சகோதரி. நினா பெனடிக்டா கிராபிக், MVZ 

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் புதிய துணை இயக்குநர் சகோ. நினா கிராபிக் MVZ

அருள்சகோதரி. நினா பெனடிக்டா கிராபிக், MVZ. அவர்கள், உரோமையிலுள்ள பாப்பிறை கிரிகோரியன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் முனைவர் பட்டம் பெற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகத்தின் புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி. நினா பெனடிக்டா கிராபிக், MVZ., அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

தற்போது சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் அலுவலராகப் பணிபுரிந்து வரும் குரோஷிய துறவற சபையைச் சேர்ந்த அருள்சகோதரி கிராபிக் அவர்கள், 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்தப் பதவியை வகித்து இராஜினாமா செய்த கிறிஸ்டியன் முர்ரேக்குப் பிறகு பதவியேற்பார்.

தற்போதைய புதிய பதவிக்கு முன்னர், அருள்சகோதரி கிராபிக் அவர்கள் ஒரு பத்திரிகையாளராகவும், வீட்டு வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கான சட்ட ஆலோசகராகவும், ரிஜேகா மறைமாவட்டத்தில் காரித்தாஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்புத் தலைவராகவும் பணியாற்றினார்.

அருள்சகோதரி. கிராபிக் அவர்கள், தற்போது உரோமையிலுள்ள பாப்பிறை கிரிகோரியன் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியலில் முனைவர் பட்டம் பெற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், முர்ரேயின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட, சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி அவர்கள், அருள்சகோதரி கிராபிக்கின் பணிசார்ந்த திறன்கள் மற்றும் தனிப்பட்ட நற்பண்புகளில் நம்பிக்கைகொண்டவராக இப்புதிய பணிக்கு அவரை நம்பிக்கையுடன் வரவேற்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 பிப்ரவரி 2026, 11:43