தேடுதல்

தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி  (ANSA)

கிரான்ஸ்-மொன்தானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

திருத்தந்தை தனது ஆறுதல் செய்தியில், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திலிருந்து வலிமையைப் பெறவும், அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்துகொள்வதுடன், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையை கொண்டிருக்கவும் ஊக்குவித்துள்ளார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த மாதம் பல உயிர்களைப் பலிகொண்ட கிரான்ஸ்-மொன்தானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த ஆறுதல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

காயங்களிலிருந்து நலமடைந்து வருபவர்களுக்குத் தனது ஆறுதலையும் உடனிருப்பையும் வழங்கியுள்ள திருத்தந்தை லியோ அவர்கள், ஆன்மிக மற்றும் உடன்பிறந்த ஆதரவிற்கான திருஅவையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திலிருந்து வலிமையைப் பெறவும், அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்துகொள்வதுடன், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையை கொண்டிருக்கவும்  ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

"தங்கள் அன்புக்குரியவர்கள் உண்மையிலேயே தொலைந்து போகவில்லை" என்றும், "மரணம் அல்லது துன்பம் கூட எதுவும் அவர்களைக் கடவுளின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது" என்றும் குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.

இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல், துணிவு மற்றும் இறைவேண்டல்களை வழங்கும் ஓர்  அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்துடன்  தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 பிப்ரவரி 2026, 13:25