தேடுதல்

பெருவின் சிக்லாயோவில் உள்ள அமைதியின் அன்னைப் பேராலயம் பெருவின் சிக்லாயோவில் உள்ள அமைதியின் அன்னைப் பேராலயம்   (AFP or licensors)

நோயுற்றவர்கள் அமைதிக்காக தங்கள் துன்பங்களை அர்ப்பணிக்க வேண்டும்!

திருத்தந்தை தனது செய்தியில், பெரு மற்றும் சிக்லாயோ மறைமாவட்டத்துடனான தனது தனிப்பட்ட உறவுகளையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாவின் தாய்வழி பராமரிப்பின் அடையாளமாக, நாட்டில் உலக நோயுற்றோர் நாளைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நோயால் அவதிப்படுபவர்கள் கடவுளின் பிறரன்புப் பணியில் அமைதியைக் காணவும், உலக அமைதிக்காகத் தங்கள் துயரங்களை இறைவேண்டலில் சமர்ப்பிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பெருவின் சிக்லாயோவில் உள்ள அமைதியின் அன்னைப் பேராலயத்தில் பிப்ரவரி 11, புதனன்று கொண்டாடப்படும் 34-வது உலக நோயுற்றோர் நாளை முன்னிட்டு, திருத்தந்தையின்  சிறப்புத் தூதர் கர்தினால் மைக்கேல் செர்னி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் திருத்தந்தை.

நோய், வலி ​​அல்லது துன்பத்தைத் தாங்கும் அனைவருக்கும் திருஅவையின் உடனிருப்பை நினைவுகூர்ந்து, அன்னை புனித கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டிக்கொள்வதாகவும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கடவுளின் அன்பில் மட்டுமே உண்மையான மற்றும் நீடித்த அமைதி காணப்படுகிறது என்ற புனித அகுஸ்தினாரின் படிப்பினையை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, தேவைப்படும் காலங்களில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பெரு மற்றும் சிக்லாயோ மறைமாவட்டத்துடனான தனது தனிப்பட்ட உறவுகளையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாவின் தாய்வழி பராமரிப்பின் அடையாளமாக, நாட்டில் உலக நோயுற்றோர் நாளைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஜனவரி 21 தேதியிட்ட செய்தியில், நோயுற்றவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் விசுவாசம், நம்பிக்கை மற்றும் இரக்கத்திற்குச் சான்று பகரவும், நற்செய்தியிலிருந்தும் கிறிஸ்துவுடனான ஒன்றிப்பிலிருந்தும் வலிமையைப் பெறவும் திருத்தந்தை ஊக்குவித்தார் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2026, 12:59