தேடுதல்

திருத்தந்தையின் உரையாடும் அல்பேனிய பிரதமர் திருத்தந்தையின் உரையாடும் அல்பேனிய பிரதமர்   (ANSA)

திருத்தந்தையுடன் அல்பேனிய பிரதமர் சந்திப்பு!

"வத்திக்கான் செயலகத்தில் நடந்த கலந்துரையாடல்கள் சுமூகமானவையாகவும், பொதுவான நலன் சார்ந்த பிரச்சனைகளில், குறிப்பாக, திருஅவைச் சமூகத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் கவனம் செலுத்தியதாகவும் இருந்தன" : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 05, வியாழக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அல்பேனிய குடியரசின் பிரதமர் எடி இராமா அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

திருத்தந்தையுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் எடி இராமா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இருவரையும் சந்தித்து உரையாடினார் என்றும் தெரிவித்துள்ளது.

"வத்திக்கான் செயலகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடல்கள் சுமூகமானவையாகவும், பொதுவான நலன் சார்ந்த பிரச்சனைகளில், குறிப்பாக, திருஅவைச் சமூகத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் கவனம் செலுத்தியதாகவும் இருந்தன" என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை உரைத்துள்ளது.

மேலும் "மேற்கு பால்கனின் நிலைமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கான அல்பேனியாவின் பாதை உள்ளிட்ட மாநில விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது" என்று அதன் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 பிப்ரவரி 2026, 11:13