வானொலி ஒளிபரப்பு மையத்தில் திருத்தந்தை லியோ வானொலி ஒளிபரப்பு மையத்தில் திருத்தந்தை லியோ   (ANSA)

கடவுள் வானொலிக்கு ஆதரவளிக்கிறார்!

1861-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செய்தித்தாள் முதல் 1931-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு வரையிலான வத்திக்கான் தகவல்தொடர்புகளின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், வத்திக்கான் ஊடகம் மற்றும் வத்திக்கான் செய்தி இணையதளத்தின் கீழ் இன்றைய ஒருங்கிணைந்த தளங்கள் குறித்து தனது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார் அந்திரேயா மோந்தா

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் வானொலியின் 95-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், Osservatore Romano எனப்படும் வத்திக்கானின் அதிகாரப்பூர்வ நாளிதழின் இயக்குநர் அந்திரேயா மோந்தா அவர்கள், "கடவுள் வானொலிக்கு ஆதரவளிக்கிறார்" என்றும், "திருஅவையின் பணியுடன் மிக நெருக்கமாக இணைந்த ஊடகம் வானொலி" என்றும் விவரித்துள்ளார்.

1861-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செய்தித்தாள் முதல் 1931-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு வரையிலான வத்திக்கான் தகவல்தொடர்புகளின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், வத்திக்கான் ஊடகம் மற்றும் வத்திக்கான் செய்தி இணையதளத்தின் கீழ் இன்றைய ஒருங்கிணைந்த தளங்கள் குறித்து சிந்தித்துள்ள மோந்தா அவர்கள், வானொலியின் தனித்துவமான ஆன்மிகப் பரிமாணம் குறித்தும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"கிறிஸ்தவ நம்பிக்கை என்பது கேட்பதில் வேரூன்றியுள்ளது" என்றும், "திருவிவிலியம் எழுதப்படுவதற்கு முன்பு, அது பேசப்பட்டு கேட்கப்பட்டது" என்றும் குறிப்பிட்டுள்ள மோந்தா அவர்கள், 'விசுவாசம் கேட்பதிலிருந்து வருகிறது' என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, "கடவுள் மனித சுதந்திரத்தை மூழ்கடிப்பதற்குப் பதிலாக மெதுவாக தொடர்பு கொள்ளத் தேர்வு செய்கிறார்" என்று வாதிட்டுள்ளார்.

"முழு கவனத்தையும் ஈர்க்கும் தொலைக்காட்சியைப் போலன்றி, வானொலி அன்றாட வாழ்க்கையை அமைதியாகத் தொடர உதவுகிறது, கேட்போர் சுதந்திரமாக இசைக்க அனுமதிக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ள மோந்தா அவர்கள், "இந்த வழியில், வானொலி கடவுளின் நுட்பமான உடனிருப்பை  வெளிப்படுத்துகிறது, எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் உளச் சுதந்திரமுடன் செவிமடுப்பதற்கு அழைப்பு விடுக்கிறது" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 பிப்ரவரி 2026, 13:13