திருத்தந்தை தனது முதல் திருத்தூதுப் பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் உரையாடல்  திருத்தந்தை தனது முதல் திருத்தூதுப் பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் உரையாடல்   (AFP or licensors)

திருத்தந்தையை வரவேற்க காத்திருக்கும் மொனாக்கோ!

மொனாக்கோ அரசு மற்றும் அதன் உயர் மறைமாவட்டம் இரண்டும் திருத்தந்தையின் இந்த முதல் திருத்தூதுப் பயணத்தை நம்பிக்கை, உரையாடல் மற்றும் அமைதியின் அடையாளமாக எடுத்துக்காட்டியுள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரும் மார்ச் 28, சனிக்கிழமை, குருத்தோலை ஞாயிறுக்கு முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்திற்காக மொனாக்கோ அரசும் அதன் தலத்திருஅவையும் ஆவலுடன் காத்திருக்கிறது.

இளவரசர் அரண்மனை மற்றும் மொனாக்கோ உயர் மறைமாவட்டம் ஆகிய இரண்டாலும் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், ஓர் இறையாண்மைக் கொண்ட திருத்தந்தை அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அமைந்துள்ளது.

ஜனவரி 17,சனிக்கிழமையன்று, மொனோக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் அவர்கள் வத்திக்கானில் திருத்தந்தையை நேரில் சந்தித்து தங்கள் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததன் பயனாக இப்பயணம் அமைந்துள்ளது.

திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், கிரிமால்டி குடும்பத்திற்கும் வத்திக்கானுக்கும் இடையிலான நீண்டகால உறவைக் காட்டுகிறது மற்றும் வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுக்கான அவர்களின் பகிரப்பட்ட ஆதரவை வலியுறுத்துகிறது

மொனாக்கோ உயர் மறைமாவட்டத்தின் 140-வது ஆண்டு நிறைவு மற்றும் அந்நாட்டின் முதல் பங்குத் தளத்தின் 780-வது ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னதாக திருத்தந்தையின் இந்த முதல் திருத்தூதுப் பயணம் அமைகிறது என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

மொனாக்கோ அரசு மற்றும் அதன் உயர் மறைமாவட்டம் இரண்டும் திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணத்தை நம்பிக்கை, உரையாடல் மற்றும் அமைதியின் அடையாளமாக எடுத்துக்காட்டியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 பிப்ரவரி 2026, 12:33