வெனிசுலா நோபல் பரிசு பெற்ற மச்சாடோவுடன் திருத்தந்தை சந்திப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற, வெனிசுலா அரசியல்வாதியும் மனித உரிமை ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது வெனிசுலாவின் முன்னாள் அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் நிலவி வரும் பெரும் அரசியல் எழுச்சிகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மதுரோவின் நீண்டகால எதிர்ப்பாளரும் வென்டே வெனிசுலா கட்சியின் தலைவருமான மச்சாடோ அவர்கள் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார். இப்போது அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் உட்பட அனைத்துலகத் தலைவர்களுடன் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த உரையாடலின்போது, வெனிசுலாவின் நிலைமை குறித்து பலமுறை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய திருத்தந்தை, வன்முறையை விடுத்து, மனித மற்றும் சிவில் உரிமைகள், நீதி, அமைதி மற்றும் தேசிய இறையாண்மையை மதிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அனைத்துலகச் சமூகமும் வெனிசுலா தலைவர்களும் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கவும், வலுக்குறைந்தவர்களைப் பாதுகாக்கவும், பல ஆண்டு நெருக்கடிக்குப் பிறகு அமைதியான, அரசியல் நிலை மாற்றத்தை (மக்களாட்சி) நோக்கி பாடுபடவும் அவரிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
