மிலான்-கோர்டினா ஒலிம்பிக் போட்டிகள் மிலான்-கோர்டினா ஒலிம்பிக் போட்டிகள்   (REUTERS)

ஒலிம்பிக் போட்டிகள் நட்பு, ஒன்றிப்பு மற்றும் அமைதியை வளர்க்க வேண்டும்!

ஒலிம்பிக் போட்டிகள் "நட்பு மற்றும் உடன்பிறந்த உணர்வுகளை" எழுப்பி, மனித வளர்ச்சிக்கான ஒரு வழிமுறையாக விளையாட்டின் மீதான போற்றுதலை வலுப்படுத்தும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒலிம்பிக் போட்டிகள் நட்பு, ஒன்றிப்பு மற்றும் அமைதியை வளர்க்கக் கூடியவைகளாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 29, வியாழனன்று மிலான்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு (பிப்ரவரி 6–22) முன்னதாக அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை, உடன்பிறந்த உறவையும் அமைதியையும் மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்களிப்பை வலியுறுத்தியுள்ளார்.

“ஒலிம்பிக் போட்டிகள் "நட்பு மற்றும் உடன்பிறந்த உணர்வுகளை" எழுப்பி, மனித வளர்ச்சிக்கான ஒரு வழிமுறையாக விளையாட்டின் மீதான போற்றுதலை வலுப்படுத்தும்" என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும் "நலமான போட்டி" மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையில் உறவுப் பாலங்களை உருவாக்கவும், வரவேற்பு, ஒன்றிப்பு மற்றும் அமைதியை வளர்க்கவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, போட்டிகள் சிறப்பாக நடைபெற இறைவேண்டல் செய்வதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

மிலான் பேராயர் மரியோ தெல்பினி அவர்களுக்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு இந்தச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2026, 12:23