தேடுதல்

லக்ஸம்பர்க் இளவரசர் மற்றும் இளவரசியுடன் திருத்தந்தை லக்ஸம்பர்க் இளவரசர் மற்றும் இளவரசியுடன் திருத்தந்தை  

லக்ஸம்பர்க் இளவரசர் மற்றும் இளவரசியை வரவேற்றார் திருத்தந்தை!

இச்சந்திப்பின் போது தற்போதைய அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, ஐரோப்பாவின் தற்போதைய சூழலுக்குப் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஜனவரி 23, வெள்ளியன்று, லக்ஸம்பர்க் நாட்டின் ஐந்தாம் இளவரசர் கில்லோம் மற்றும் அவரது துணைவியார்  இளவரசி ஸ்டெபானி ஆகியோரைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சந்திப்பின் போது,  திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் ஐந்தாம் இளவரசர் கில்லோம்.

திருப்பீடச்  செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளின் போது, லக்ஸம்பர்க் மற்றும் திருப்பீடத்திற்கு  இடையே நிலவும் வலுவான தூதரக உறவுகளை அதிகாரிகள் கோடிட்டுக் காட்டினர்.

மேலும், சமூக ஒற்றுமை, இளைஞர் கல்வி, மற்றும் மனித மாண்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டன.

இச்சந்திப்பின் போது தற்போதைய அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, ஐரோப்பாவின் தற்போதைய சூழலுக்குப் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜனவரி 2026, 13:48