தேடுதல்

திருத்தந்தையுடன் உரையாடும் ராபர்ட்டா மெட்சோலா திருத்தந்தையுடன் உரையாடும் ராபர்ட்டா மெட்சோலா  (ANSA)

திருத்தந்தையுடன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் சந்திப்பு!

உரோமைப் பயணத்தின் போது, மெட்சோலா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்தார். மேலும் இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியையும் சந்தித்து கலந்துரையாட நடத்த உள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 29, வியாழக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவை திருப்பீடத்தில் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பின்போது இருவரும் ஐரோப்பாவிலும் உலக அளவிலும் உரையாடல் மூலம் அமைதியை முன்னேற்றுவது குறித்து விவாதித்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மெட்சோலா அவர்கள், திருத்தந்தையிடமிருந்து வெளிப்பட்ட தெளிவான சிந்தனைகளைக் குறித்துப் பாராட்டினார். மேலும் அமைதியை மேம்படுத்துவதில் அவர்களின் பகிரப்பட்ட சிந்தனைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

உரோமைப் பயணத்தின் போது, ​​மெட்சோலா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்தார். மேலும் இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

அன்றைய தினம் பிற்பகுதியில், உரோமையில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் ஐரோப்பா மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த நிகழ்வில் உரையாற்றுவார் மெட்சோலா.

கூடுதலாக மெட்சோலா அவர்கள் மால்டாவின் உயர்மட்டத் தலைவர்  (நிர்வாகம், சட்டம் மற்றும் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு பொறுப்பான) ஃப்ரா' ஜான் டன்லப் அவர்களைச் சந்தித்து உக்ரைன் மற்றும் காசா உள்ளிட்ட மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட மனிதாபிமான பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜனவரி 2026, 11:44