மறைச்சாட்சியம் என்பது விண்ணகத்தில் பிறப்பது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“விசுவாசக் கண்களால் பார்ப்பது என்பது இறப்பிலும் கூட வெறும் இருளைக் காண்பதில்லை, ஏனென்றால் மறைச்சாட்சியம் என்பது விண்ணகத்தில் பிறப்பது” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை, முதல் மறைச்சாட்சி புனித ஸ்தேவானின் விழாவை திருஅவை சிறப்பிக்கும் இந்நாளில், தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.
“புனித ஸ்தேவான் செய்தவை, கூறியவை ஒவ்வொன்றும் இயேசுவில் தோன்றிய இறையன்பை, நமது இருளில் ஒளிர்ந்திடும் ஒளியைக் குறிக்கிறது” என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
