தேடுதல்

இசைக்கலைஞர்களுடன் திருத்தந்தை இசைக்கலைஞர்களுடன் திருத்தந்தை   (ANSA)

இசை, கடவுளிடம் நம்மை கொண்டு செல்வதற்கான ஒரு வழியாக உள்ளது!

"மனித மாண்பு என்பது பொருள் சார்ந்தது அல்ல என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, மேலும் சமூகத்தின் மிகவும் வலுவற்றவர்கள்மீது இந்த இசை நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இயேசுவின் மனுவுருவாதல் குறித்த கிறிஸ்தவ போதனையையும், மனிதகுலத்தின் மீது கடவுள் கொண்டுள்ள நெருக்கத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இந்த இசை நிகழ்ச்சி வெறும் கலாச்சார அல்லது தொண்டு நிகழ்வு மட்டுமல்ல. இது, ஏழைகளை கிறிஸ்துவில் காணக்கூடிய ஒரு நினைவூட்டலாகும் என்று எடுத்துரைத்தார்.

டிசம்பர் 5, இவ்வெள்ளியன்று, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, வத்திக்கானில் இடம்பெற்ற ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சி ஒன்றின் கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வை, ஓர் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் பாரம்பரிய விழா என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மனித மாண்பு என்பது பொருள் சார்ந்தது அல்ல என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, மேலும் சமூகத்தின் மிகவும் வலுவற்றவர்கள்மீது இந்த இசை நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது என்று பாராட்டி மகிழ்ந்தார்.

மேலும் இசையின் ஆன்மிக வலிமை பற்றிப் பேசிய திருத்தந்தை, அது கடவுளிடம் நம்மை கொண்டு செல்வதற்கான ஒரு வழியாகும் என்று கூறி, நன்றாகப் பாடும்படி இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

மைக்கேல் புப்ளே மற்றும் அவரது இசைக்குழு உட்பட, இதில் கலந்து கொண்ட  திருஅவைத் தலைவர்கள் , கலைஞர்கள் மற்றும் துணைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2025, 14:06