தேடுதல்

இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை   (@Vatican Media)

அமைதி என்பது உண்மையிலேயே இதயத்தில் மட்டுமே காணப்படும் ஒரு கொடை!

"உண்மையான அமைதி என்பது மோதல் இல்லாததை விட உயர்வானது, அது நட்பையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அமைதியை ஏற்படுத்துவது ஒரு சிறந்த கத்தோலிக்கச் செயலாகும், ஏனென்றால் அது உலக மீட்பரான இயேசுவுக்குச் சான்று பகர்பவர்களாக நம்மை மாற்றுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 19, வெள்ளியன்று, இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் குழந்தைகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை, அமைதி என்பது உண்மையிலேயே இதயத்தில் மட்டுமே காணப்படும் ஒரு கொடை என்றும் தெரிவித்தார்.

இவ்வியக்கத்தின் இவ்வாண்டு கருப்பொருளான "அனைவருக்கும் இடமுண்டு" என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இயேசு அனைவரையும் வரவேற்கிறார் என்பதை அவர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.

இயேசு பிறப்பு காட்சியைப் பார்த்து இறைவேண்டல் செய்யவும், பியர் ஜோர்ஜியோ ஃபிரசாத்தி மற்றும் கார்லோ அக்குதிஸ் போன்ற புனிதர்களைப் போல வாழ ஆசைகொள்ளவும் மற்றும் அன்றாட வாழ்வில் அமைதியை அதிகமாகப் பின்பற்றவும் அவர்களை ஊக்குவித்தார்.

உண்மையான அமைதி என்பது மோதல் இல்லாததை விட உயர்வானது என்றும், அது நட்பையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கிக் காட்டினார் திருத்தந்தை.

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்பு யாரிடமாவது ஒப்புரவு செய்து கொள்ளுமாறும், அமைதியை இதயப்பூர்வமான கொடையாகவும் கத்தோலிக்க நம்பிக்கையின் முக்கிய வெளிப்பாடாகவும் வடிவமைக்குமாறும், அவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 டிசம்பர் 2025, 13:28