மனித மாண்பே பணியிட முடிவுகளை வழிநடத்த வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இத்தாலிய வேலைவாய்ப்பு ஆலோசகர்கள், குறிப்பாக குழந்தைகள் அல்லது பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டவர்கள், மக்களையும் குடும்பங்களையும் பணியின் மையத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 18, வியாழக்கிழமையன்று, இத்தாலிய வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் சங்கத்தின் தொழில்முறை பதிவேடு நிறுவப்பட்ட 60-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருப்பீடத்தில் அதன் ஆலோசகர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இலாபமோ அல்லது சந்தைக் காரணிகளோ அல்ல, மனித மாண்பே பணியிட முடிவுகளை வழிநடத்த வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவித்த திருத்தந்தை, அதிகமான வேலைகள் இன்னும் காயம் மற்றும் இறப்புக்கான இடங்களாக மாறி வருவதாக எச்சரித்ததுடன், முறையான பயிற்சிகள் வழியாக இவற்றைத் தடுத்து நிறுத்துமாறு அவர்களிடம் விண்ணப்பித்தார்.
முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடுநிலையாளர்களாக ஆலோசகர்களின் பங்கை எடுத்துரைத்த திருத்தந்தை அதிகப்படியான அதிகாரத்துவம் அல்லது பற்றின்மைக்கு எதிராகவும் அவர்களை எச்சரித்தார்.
மேலும் தொழிலாளர்களுடன், குறிப்பாக மிகவும் வலுக்குறைந்தவர்களுடன் நெருக்கமாக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டு அவர்களுக்குத் தனது ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
