தேடுதல்

திருத்தந்தையுடன் இத்தாலிய நகரத் தலைவர்கள் திருத்தந்தையுடன் இத்தாலிய நகரத் தலைவர்கள்   (ANSA)

மக்களின் பொதுநலன் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க திருத்தந்தை அழைப்பு!

"கிறிஸ்தவப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜார்ஜியோ லா பிரா போன்ற சிறந்த ஆளுமைகளின் வழியில் மக்களிடையே ஒன்றிப்பையும், ஆன்மிக அமைதியையும் உருவாக்கும் வகையில் நிர்வாகம் அமைய வேண்டும்" : திருத்தந்தை

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நகரங்கள் என்பது வெறும் கட்டிடங்களின் தொகுப்பல்ல, அவை மக்களின் உணர்வுப்பூர்வமான கதைகளால் கட்டமைக்கப்பட்டவை. எனவே,  குடிமக்களின் குரல்களுக்குச் செவிசாய்க்குமாறும் மக்களாட்சியை  வலுப்படுத்துமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 29, திங்களன்று, வத்திக்கானில் திருப்பீடத்தில் இத்தாலிய நகரத் தலைவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எளிய மக்கள் மீது அக்கறை கொண்டு, நேர்மையுடனும் பணிவுடனும் செயல்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்கள் தொகை வீழ்ச்சி, வறுமை, குடும்பப் போராட்டங்கள், முதியவர்கள் அனுபவிக்கும் தனிமை சுற்றுச்சூழல் பாதிப்பு, சமூக மோதல்கள் மற்றும் சூதாட்டப் பழக்கம் போன்ற இன்றைய சவால்கள் குறித்தும் கவலை தெரிவித்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய கத்தோலிக்க அரசியல்வாதி, பேராசிரியர் மற்றும் அமைதி ஆதரவாளர் ஜார்ஜியோ லா பிரா போன்ற சிறந்த ஆளுமைகளின் வழியில் மக்களிடையே ஒன்றிப்பையும், ஆன்மிக அமைதியையும் உருவாக்கும் வகையில் நிர்வாகம் அமைய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறுதியாக, அனைவருக்கும் புத்தாண்டு ஆசீர்வாதங்களை வழங்கிய திருத்தந்தை, அமைதி, நம்பிக்கை மற்றும் முழுமையான மனித மேம்பாட்டை ஊக்குவித்து  தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 டிசம்பர் 2025, 13:41