தேடுதல்

உரை வழங்கும்  திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்!

"அமைதி மற்றும் அன்பிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த கிறிஸ்துவின் வாழ்வை அனைவரும் கடைப்பிடியுங்கள்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"கிறிஸ்து பிறப்பு என்பது இறைவனின் அன்பையும், அமைதி மற்றும் ஒப்புரவை நிலைநாட்ட வேண்டிய திரு அவையின் கடமையையும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வு" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 22, திங்களன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் உரோமைச் தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

 இரக்கம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருந்த அக்கறையை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, திருஅவையின் பணி எப்போதும் உயிரோட்டமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும், அது ஒருபோதும் அதிகாரத்துவக்  கட்டமைப்புக்குள் முடங்கிவிடக் கூடாது என்றும்  கூறினார்.

திரு அவைக்குள்ளும், குறிப்பாக, உரோமைச் தலைமைச் செயலகத்திற்குள்ளும் இன்னும் ஆழமான ஒன்றிப்பை உருவாக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, ஒன்றிப்பு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், பிளவுபட்டுள்ள இந்த உலகில் திருஅவையின் பங்களிப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அமைதி மற்றும் அன்பிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த கிறிஸ்துவின் வாழ்வை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திரு அவையின் முக்கிய ஆண்டுவிழாக்களைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, ஒன்றிப்பில் வாழ்வதற்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, உலகில் அமைதி நிலவவும், கிறிஸ்துவின் ஒளி அனைவரின் இதயங்களைத் தூண்டி, அவர் காட்டிய வழியில் வாழவும் இறைவேண்டல் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 டிசம்பர் 2025, 12:34