தேடுதல்

அனைத்துலக கத்தோலிக்கச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை அனைத்துலக கத்தோலிக்கச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

இறையியல் மனித அறிவியலின் அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டும்!

"இறையியல் என்பது விசுவாசத்தின் ஓர் அறிவியல், அதன் அடிப்படை நோக்கம் வரலாற்றில் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பது" : திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

திரு அவை இன்றைய சவால்களை  எதிர்கொள்ள உதவும் வகையில், அனைத்து மனித அறிவியலுடனும் இறையியல் ஆழமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 26, இப்புதனன்று, அனைத்துலக கத்தோலிக்கச் சங்கத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருஅவையையும் உலகத்தையும் வடிவமைக்கும் "புதிய விடயங்களை தெளிந்து தேர்ந்திட இறையியலாளர்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும், இறையியல் முறை, திரு அவையின் உலகளாவிய பன்முகத்தன்மைக்கு திறந்த மனப்பான்மை, துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் இறைவேண்டலில் வேரூன்றிய கல்வி ஆகியவற்றை ஊக்குவித்தார் திருத்தந்தை.

திரு அவையின் மறைவல்லுநர்களை  மேற்கோள் காட்டிய திருத்தந்தை, இறையியல் என்பது விசுவாசத்தின் ஓர் அறிவியல் என்றும்  அதன் அடிப்படை நோக்கம் வரலாற்றில் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பதே என்றும் வலியுறுத்தினார்.

முன்னாள் திருத்தந்தை 16 - ஆம் பெனடிக்ட் அவர்களின் இறையியல் கருத்தான "பகுதியளவு அறிவு" அதாவது, 'உண்மையின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் ஓர் ஆழமான நெருக்கடி பற்றிய கவலைகள்' என்பதை   நினைவு கூர்ந்த திருத்தந்தை, அதை அடிப்படையாகக் கொண்டு, இறையியல் எந்தவொரு அறிவியல் துறையையும் புறக்கணிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, திரு அவை  மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும், அவைகளுக்கு தீர்வு காண்பதற்கும் இறையியலாளர்கள் பரந்துபட்ட அளவில் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 நவம்பர் 2025, 14:59