தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்  

உரோமைத் தலைமைச் செயலகத்தின் புதிய விதிமுறைகள்!

Praedicate Evangelium எனப்படும் அப்போஸ்தலிக்க ஆவணம் மூலம் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தத்தை செயல்படுத்தும் உரோமைத் தலைமைச் செயலகத்தின் புதிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் நிறுவனங்களின் நிர்வாகத்தைப் புதுப்பித்து, உரோமைத் தலைமைச் செயலகத்தின் புதிய விதிமுறைகளையும் அதனுடன் இணைந்த பணியாளர் ஒழுங்குமுறையையும் அங்கீகரித்து வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

நவம்பர் 23, இஞ்ஞாயிறு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று கையொப்பமிடப்பட்டு நவம்பர் 24, இத்திங்களன்று, வெளியிடப்பட்ட இந்தப் புதிய விதிமுறைகள், வத்திக்கான் தலைமைச் செயலகம், திருப்பீடத் துறைகள், நீதித்துறை மற்றும் பொருளாதார அமைப்புகள் மற்றும் இது தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் இப்புதிய அறிவிப்பு பணியாளர் ஒழுங்குமுறை, உரோமைத் தலைமைச் செயலகத்தின் ஊழியர்களுக்கான நிறுவன, ஒழுங்குமுறை மற்றும் பொருளாதார விடயங்களுக்கான விதிகளை அமைக்கிறது.

மேலும் இந்தப் புதிய விதிகள், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1999 -ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மாற்றியமைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'பிரதிகாத்தே எவாஞ்செலியும்' (Praedicate Evangelium) அப்போஸ்தலிக்க ஆவணத்திலிருந்து சீர்திருத்தங்களை உள்ளடக்கியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 நவம்பர் 2025, 12:38