“நான் உன்னை அன்பு செய்தேன்” திருத்தூது அறிவுரை
மெரினா ராஜ் – வத்திக்கான்
“Dilexi te” நான் உன்னை அன்பு செய்தேன் எனப்படும் திருத்தூது அறிவுரையில் அக்டோபர் 4, சனிக்கிழமையன்றுக் கையெழுத்திட்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 4, சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 8.30 மணியளவில், திருத்தந்தையர் மாளிகையின் தனி நூலகத்தில் திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra அவர்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த ஆவணம் அக்டோபர் 9, 2025 அன்று காலை 11:30 மணிக்கு, திருப்பீட பத்திரிக்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளன்று இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
