கர்தினால் Domink Duka கர்தினால் Domink Duka 

போலந்தின் Gdańsk உயர் மறைமாவட்ட நூற்றாண்டு விழா

யூபிலி ஆண்டில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களிலிருந்து இறையியல் நற்பண்புகளுக்கு சாட்சியமளிக்க வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

போலந்தின் பிராகா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால் தோம்னிக் துகா, அவர்களை Gdańsk உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவில் திருத்தந்தை சார்பில் பங்கேற்க நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.       

அக்டோபர் 14, அன்று ஒலிவாவில் உள்ள Gdańsk பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளில் பங்கேற்கும் மக்கள், கடலில் உள்ள காற்றைப் போலவே, திருஅவையின் கப்பலை நிலையான மீட்பின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் தூய ஆவியாரின் உத்வேகத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் காண்பார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த யூபிலி ஆண்டில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களிலிருந்து இறையியல் நற்பண்புகளுக்கு சாட்சியமளிக்க வேண்டும் என்றும், நம்பிக்கை, எதிர்நோக்கு, தர்மம் மற்றும் உண்மையான ஒன்றிப்பின் வழியாக, ஒருவர் மற்றவரின் சுமைகளைச் சுமந்து கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 அக்டோபர் 2025, 14:45