கர்தினால் எதுவார்தோ மெனிகெல்லி மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறைந்த கர்தினால் எதுவார்தோ மெனிகெல்லி அவர்கள், திருஅவை சமூகத்திற்கும் உறுதியுள்ள போதகராகவும், கியேத்தி - வாஸ்தோ மறைமாவட்டத்திற்கு தாராளாமனம் கொண்டு பணியாற்றியவராகவும் இருந்தார் என்றும் இரங்கல் தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 22, புதனன்று ன்கோனா-ஓசிமோ பெருநகர உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஆஞ்சலோ ஸ்பினா அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கர்தினால் அவர்களின் மறைவால் வருந்தும் மக்களுக்குத் தனது ஆர்ழ்ந்த இரங்கல்களையும் செபத்தையும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவைக்கும், திருத்தந்தைக்கும் அர்ப்பணிப்புடன் அவர் ஆற்றிய பணியினை நினைவுகூர்ந்துள்ளார்.
அருள் நிறைந்த கன்னி மரியாவின் பரிந்துரையின் வழியாக, அவர் விண்ணக எருசலேமுக்கு வரவேற்கப்படட்டும் என்று இறைவனிடம் செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அவரது பிரிவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருக்கு அன்புடன் உதவிய அனைவருக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது ஆசீரை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
