Fraternità Mons. Courtney" குழுவினருடன் திருத்தந்தை பதினான்காம் லியோ Fraternità Mons. Courtney" குழுவினருடன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

எதிர்நோக்கின் பயணம் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக நம்மை உருவாக்கட்டும்

இன்று உலகிற்கு நம்பிக்கை தேவை. அதனால்தான் இயேசுவைச் சந்தித்து, நமது வாழ்க்கையின் மையத்திலும், உலக வாழ்க்கையின் மையத்திலும் அவரை மீண்டும் வைக்க திருப்பயணிகளாக நடப்போம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சிறந்த உலகத்திற்கான நம்பிக்கையை வைத்திருங்கள்; கிறிஸ்துவோடு ஐக்கியமாகி, உங்கள் முயற்சிகள் பலனளிக்கும், பலனளிக்கும் என்பதில் உறுதியாக இருங்கள் என்றும், எதிர்நோக்கின் பயணமானது நம்பிக்கையில் பலப்படுத்தப்பட்ட அன்றாட கடமைகளுக்கும், நற்செய்தியின் வெளிச்சத்தில் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும் சிறப்பாக நம்மைத் தயார் செய்ய உதவட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை

அக்டோபர் 22 வத்திக்கானில் ஆயர் Michael Aidan Courtney Fraternité குழு உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்ரியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

““Spes non confundit என்று இலத்தீன் மொழியில் கூறப்படும் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது (உரோமர் 5:5) என்ற நமது யூபிலி ஆண்டிற்கான கருப்பொருள், நமது நம்பிக்கை இயேசு கிறிஸ்துவே! அவர் மட்டுமே, திருஅவைக்கும் முழு உலகத்திற்கும் நம்பிக்கை என்பதை வலியுறுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

இன்று உலகிற்கு நம்பிக்கை தேவை. அதனால்தான் இயேசுவைச் சந்தித்து, நமது வாழ்க்கையின் மையத்திலும், உலக வாழ்க்கையின் மையத்திலும் அவரை மீண்டும் வைக்க திருப்பயணிகளாக நடப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கின் பயணமானது நம்பிக்கையில் பலப்படுத்தப்பட்ட அன்றாட கடமைகளுக்கும், நற்செய்தியின் வெளிச்சத்தில் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும் சிறப்பாக நம்மைத் தயார் செய்ய உதவட்டும் என்றும் கூறினார்.

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான அர்ப்பணிப்புள்ள பணிக்கு அக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இவ்வழியில், அத்தகைய மக்களுக்காகத் தன்னையே கொடுத்து, தனது நாட்டில் அமைதிக்காக உயிரைக் கொடுத்த ஆயர் கோர்ட்னியின் நினைவை மதிக்கிறார்கள் என்றும் நினைவுகூர்ந்தார்.

ஆயரின் நினைவாக, புருண்டியில் உள்ள ஒரு குடும்பம், கிறிஸ்துவின் பெயரால் ஏழைகள் மற்றும் சிறியவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகின்றார்கள் என்றும் ஆயர் படுகொலை செய்யப்பட்ட இடமான மினாகோவில் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்டுவதற்கான பங்களிப்பு கொடுத்து வருவதற்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

ஒரு நலவாழ்வு மையத்தைக் கட்டும் திட்டத்தில் அக்குழுவினர் காட்டும் ஈடுபாடு, மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அன்றாட தொண்டு பணிகள் மற்றும் பல முயற்சிகள் ஆகியவற்றின் வழியாக திருஅவைக்கு ஆற்றல் மிக்க செய்தியை வழங்குகின்றார்கள் என்றும் கூறினார்.

சிறந்த உலகத்திற்கான நம்பிக்கையை வைத்திருங்கள்; கிறிஸ்துவோடு ஐக்கியமாகி, உங்கள் முயற்சிகள் பலனளிக்கும், பலனளிக்கும் என்பதில் உறுதியாக இருங்கள். உங்களையும், உங்கள் அன்புக்குரிய நாடான புருண்டியை செபமாலை அன்னையின் பாதுகாப்பில் ஒப்படைத்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 அக்டோபர் 2025, 17:43