தேடுதல்

கடவுளுடைய அருளில் நம்மை ஒப்படைப்பதன் வழியாகவே மீட்கப்படுகின்றோம்

நேர்மை, மன்னிப்பு மற்றும் நன்றியுணர்வு வழியாக செபத்திலும் வாழ்க்கையிலும் வளர்க்கப்படும் அவருடைய அரசு நம்மிலும் நம்மைச் சுற்றியும் வளர முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது தகுதிகளை வெளிப்படுத்துவதன் வழியாகவோ அல்லது நமது தவறுகளை மறைப்பதன் வழியாகவோ நாம் மீட்கப்படுவதில்லை, மாறாக, நாம் இருப்பது போல், கடவுளுக்கு முன்பாகவும், மற்றவர்களுக்கு முன்பாகவும் மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, கடவுளுடைய அருளில் நம்மை ஒப்படைப்பதன் வழியாகவே மீட்கப்படுகின்றோம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 26 ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான ஆயக்காரர் மற்றும் பரிசேயர் குறித்த நற்செய்திக் கருத்துக்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

பரிசேயரின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளது, அவர் பல நல்ல செயல்களைச் செய்கிறார், அதனால் மற்றவர்களை விட உயர்ந்தவராகத் தன்னை உணர்கிறார், அதனால் பிறரை இழிவாகக் கருதுகிறார் என்றும், அவர் தலை நிமிர்ந்து நிற்கும் அவரது செயல் ஆணவத்துடன் அவர் நிற்பதை எடுத்துரைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அவரது செயல் அவர் சட்டங்களைக் கடைபிடித்து அதற்கேற்றபடி செயல்படுகின்றார் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது என்றும்,  அன்பில் ஏழையாக, பிறருக்குக் கடன் கொடுப்பதையும் வைத்திருப்பதையும் ஒரு கடமையாக  எண்ணுகின்றார், இரக்கமற்றவராக விளங்குகின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

வரி வசூலிப்பவர் மிகவும் வித்தியாசமான முறையில் செபிக்கின்றார். தான் மன்னிக்கப்பட வேண்டிய ஒரு ஆள் என்ற முறையில் இறைவனை  நோக்கி செபிக்கின்றார் என்றும்,  உரோமானியப் பேரரசின் ஊதியத்தில் ஒரு வரி வசூலிப்பவராக, தனது சொந்த நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வரி வசூலிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இருவரில், வரிவசூலிக்கும் ஆயக்காரர் தான்  "நீதிமானாக தமது இல்லம் திரும்புகிறார் என்னும் மிக முக்கியமான செய்தியை  இயேசு நமக்குத் தருகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஆயக்காரர், கடவுளுடனான சந்திப்பால் மன்னிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறார் என்றும் விளக்கினார்.

ஏனெனில் வரி வசூலிப்பவர் கடவுளுக்கு முன்பாக தன்னை முன்வைக்க துணிவையும் மனத்தாழ்மையையும் கொண்டிருக்கிறார், அவர் தனது சொந்த உலகில் தன்னை மூடிக்கொள்வதில்லை, அவர் செய்த தீமைக்கு அவர் தன்னை விட்டுக்கொடுக்கவில்லை என்றும், மற்றவர்கள் மீது அவர் செலுத்தும் அதிகாரத்தால் அவர் அச்சம் கொள்ளும் இடங்களை விட்டு வெளியேறுகிறார், பாதுகாப்பாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடுமையான பார்வைகளையும் கூர்மையான தீர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், யார் துணையும் இல்லாமல், தனியாக கோவிலுக்கு வருகிறார் என்றும், மேலும் அவர் தலை குனிந்து, பின்னால், கடவுளுக்கு முன்பாக நிற்கிறார், சில வார்த்தைகளை உச்சரிக்கிறார்: "ஓ கடவுளே, நான் ஒரு பாவி, என் மீது இரக்கமாயிரும்" என்று செபிக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நம் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றை வெளிப்படுத்தவும், அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கடவுளின் இரக்கத்திற்கு நம்மை ஒப்படைக்கவும் நாம் அஞ்ச வேண்டாம் என்றும், இந்த வழியில், பெருமையுள்ளவர்களுக்கு அல்ல, தாழ்மையானவர்களுக்கு சொந்தமானது, மேலும் நேர்மை, மன்னிப்பு மற்றும் நன்றியுணர்வு வழியாக செபத்திலும் வாழ்க்கையிலும் வளர்க்கப்படும் அவருடைய அரசு நம்மிலும் நம்மைச் சுற்றியும் வளர முடியும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 அக்டோபர் 2025, 18:31