இவ்வாண்டிற்கான சிலுவைப்பாதை வழிபாட்டை தயாரித்துள்ள திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மூச்சு விடுவதிலும் சரளமாகப் பேசுவதிலும் சிரமம் போன்றவைகளை சந்தித்துவரும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகளின் வழி நல்ல முன்னேற்றத்தை அவர் கண்டு வருவதாக ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது திருப்பீட தகவல் தொடர்புத்துறை.
ஆக்ஸிஜன் வழங்குவது மாலை வேளைகளில் மட்டும், அதுவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நேரங்களில் மட்டும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கும் இவ்வறிக்கை, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சிகிச்சை முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், திருஅவையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாகவும் அறிவிக்கிறது.
இவ்வாண்டிற்கான சிலுவைப்பாதை வழிநடத்தலை அவரே தயாரித்ததாகவும், அது புனித வெள்ளியன்று நண்பகலில் வெளியிடப்படும் எனவும், இவ்வாண்டு கொலோசேயத்தில் இடம்பெறவிருக்கும் சிலுவைப்பாதையை திருத்தந்தையின் சார்பில் கர்தினால் Baldassare Reina அவர்கள் வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வியாழன் காலையில் திருஎண்ணெய் மந்திரிப்பு திருப்பலியை கர்தினால் Domenico Calcagno அவர்கள் தலைமையேற்று வழி நடத்துவார் எனவும், புனித வெள்ளியன்று பாடுகளின் திருவழிபாட்டை கர்தினால் Claudio Gugerotti அவர்கள் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையே தனக்குப் பிரதிநிதியாக இந்த திருவழிபாட்டுச் சடங்குகளில் பங்கேற்பவர்களை நியமித்துள்ளார்.
திருத்தந்தையின் உடல் நலம் குறித்த அடுத்த அறிக்கை, வரும் வெள்ளியன்று வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்