தேடுதல்

கத்தோலிக்க அருள்பணியாளர் தந்தை சாமுவேல் ஒபெயெமி ஒயெட்டோரோ கத்தோலிக்க அருள்பணியாளர் தந்தை சாமுவேல் ஒபெயெமி ஒயெட்டோரோ 

நைஜீரியாவில் சாலையோரத் தாக்குதலில் கத்தோலிக்க குரு கொலை!

நைஜீரியாவின் கோகி மாநிலத்தில், சாலையோரத் தாக்குதலில் கத்தோலிக்க அருள்பணியாளர் தந்தை சாமுவேல் ஒபெயெமி ஒயெட்டோரோ அரிவாளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோகி மாநிலத்தின் அஜாவோகுட்டா பகுதியில், சாலையோரத் தாக்குதலில் கத்தோலிக்க அருள்பணியாளர்  ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அருள்பணியாளர் சாமுவேல் ஒபெயெமி ஒயெட்டோரோ அவர்கள் தேவாலயச் சாலையில் பயணித்தபோது, மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

காவல்துறை அளித்த தகவலின்படி, ஜூலை 29 அன்று காலை சுமார் 9.30 மணியளவில், அஜாவோகுட்டா தேவாலயச் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் உயிரற்ற உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தலையில் கடுமையான அரிவாள் காயங்களுடன் உடலை மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், உயிரிழந்தவர் கோகி மாநிலத்தின் இஜுமு உள்ளாட்சிப் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் பங்கின் பங்குக் குருவான தந்தை ஒயெட்டோரோ என்பது அடையாளம் காணப்பட்டது. அவரது ஆன்ம இளைப்பாறலுக்காகவும், குடும்பத்தினருக்காகவும் செபிக்குமாறு லோகோஜா மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

கோகி மாநில ஆளுநர் அகமது ஒடோடோ அவர்கள்  இந்தக் கொலையை "மிகவும் கொடூரமானதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல்" என்று கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஆகஸ்ட் 2026, 15:20