இன்றைய புனிதர்
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித பேதுரு டேரென்டெய்ஸ் (1102 - 1175)
பிரான்ஸ் நாட்டிலுள்ள செயின்ட் மௌரிஸ் என்ற இடத்தில் கி.பி 1102 ஆம் ஆண்டு பிறந்தார் டேரென்டெய்ஸ்.தன் 20-வது வயதில் சிஸ்டர்சியன் துறவற சபையினில் சேர்ந்த இவர் துறவறப்பயிற்சி பெற்று ஆண்டவருக்கு தன்னை அர்பணித்தார். இறைபக்தியிலும் நிர்வாக திறனிலும் சிறந்திருந்த இவர் கி.பி 1132 ஆம் ஆண்டு தன் 30 வது வயதில் தன் சபையின் தலைவராக பொறுப்பேற்றார். நோயாளிகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்த அருட்தந்தை டேரென்டெய்ஸ் கி.பி 1142 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் டெரென்டெய் மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார். தன் மறைமாவட்டத்திலுள்ள விவசாயிகள் கடும் பஞ்சத்தினால் பாதிக்கபட்ட போது தொண்டு நிறுவனம் அமைத்து அவர்களின் பசி தீர்த்தார்.
திருத்தந்தையர்களுக்கும் பேரரசர்களுக்கும் ஆலோசராக இருந்த பேராயர் பேதுரு திருத்தந்தை 3ஆம் அலெக்சான்டர் பேரரசன் பார்பர்ரோசாவின் சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டபோது பேரரசனை கடுமையாக எதிர்த்தார். இங்கிலாந்து அரசுக்கும் பிரான்ஸ் நாட்டின் அரசுக்கும் அமைதி தூதுவராக இருந்து சமாதானத்தினை ஏற்படுத்திய பேராயர் பேதுரு தன் சொந்த ஊரான செயின்ட் மொளரிஸ் திரும்பும் வழியில் விண்ணகமடைந்தார். மக்களுக்கும் மட்டுமல்லாமல் அரசர்களுக்கும் நற்செய்தியினை அறிவித்து இறைப்பணிகளை செய்த பேராயர் பேதுரு டோரன்டெய்ஸினை கி.பி 1191 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் செலஸ்டினை திரு அவை புனிதராக உயர்த்தினார். இன்று புனித பேதுரு டேரன்டெய்ஸ் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் விவசாயிகளுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்