தேடுதல்

புனித அத்தனாசியுஸ் புனித அத்தனாசியுஸ் 

இன்றைய புனிதர்

ஆரியுஸின் தவறான கொள்கைகளை துணிவுடன் எதிர்த்து, பல துன்பங்களையும் எதிர்கொண்டு கிறிஸ்துவின் உண்மையை நிலைநாட்டி மக்களை ஆன்மீகத்தில் வளர்த்த புனித அத்தனாசியுஸ், உறுதியான நம்பிக்கையின் சிறந்த சாட்சியாக போற்றப்படுகிறார்.

திரு. பிலோமி அலெக்ஸ்

எகிப்து நாட்டில் வாழ்ந்த இறைபக்தி நிறைந்த குடும்பத்தில் கி.பி. 295 ஆம் பிறந்தார் அத்தனாசியுஸ். அலெக்ஸாந்திரியா நகர் ஆயர் அலெக்சாண்டரினால் உதவியினால் கல்விபயின்ற இவர் 319 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் புனித வனத்து அந்தோணியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.அலெக்ஸாந்திரியா நகர ஆயர் அலெக்ஸாண்டரின் செயலராக பணிகளை செய்த அத்தனாசியுஸ் அறிவார்ந்த இறையியலராக திகழ்ந்தார். எகிப்து, லிபியா பகுதி மக்களை ஆன்மீகத்தில் வளர்த்த அத்தனாசியுÞ கி.பி.328 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள் அலெக்ஸாந்திரியா நகரின் ஆயராக அருட்பொழிவு பெற்றார்.

அக்காலத்தில் நிலவிய ஆரியுஸின் தப்பறைக்கொள்கைகளை கடுமையாக எதிர்த்த இவர் அக்கொள்கைகளை பின்பற்றிய ஆயர்களையும் மக்களையும் அன்பு செய்து வாழ்ந்தார். தீமையானதை செய்யாமலிருந்தால் மட்டும் போதாது, நன்மையை செய்யாமல் இருப்பதும் தீமையே என்று கூறிய அத்தனாசியுஸ் கி.பி.373 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் விண்ணகப் பிறப்படைந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கிடையிலும் ஆண்டவரை மக்களுக்கு அறிவித்து கிறிÞதுவ நெறிகளை விதைத்த அத்தனாசியுஸினை திரு அவை புனிதராக உயர்த்தியது. இன்று புனித அத்தனாசியுஸ் திருவிழாவினை கொண்டாடுகின்ற பிரச்சனைகளில், துன்பங்களில் துவண்டு போய்விடாமல் நம்பிக்கையோடு ஆண்டவரிடம் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2026, 13:55