தேடுதல்

வன்முறையற்ற உலகுக்கு கர்தினால் குபிச் அழைப்பு வன்முறையற்ற உலகுக்கு கர்தினால் குபிச் அழைப்பு 

வன்முறையற்ற உலகை உருவாக்க கர்தினால் Blase Cupich அழைப்பு!

அமைதி என்பது மோதல்களை நீதியின் மூலம் மாற்றுவதும், எதிரியிடமும் மனித மாண்பைக் காண்பதும், ஒழுக்கமும் தியாகமும் நிறைந்த ஒரு கலையாக அதைப் பயில்வதுமே ஆகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

நிதிக் கொள்கை சார்ந்த போர்ச் சிந்தனைகளை விட நற்செய்தியை மையமாகக் கொண்ட சமாதானத்தை உருவாக்குமாறு சிக்காகோ பேராயரான கர்தினால் Blase Cupich அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்க இறையியல் கூட்டமைப்பு வழங்கிய "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" விருதினை அண்மையில் பெற்றுக் கொண்ட கர்தினால் கர்தினால்  Cupich அவர்கள் அந்நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.

போர் மற்றும் அமைதி குறித்த கிறிஸ்தவக் பார்வைகளை முன்வைத்த கர்தினால் Cupich அவர்கள்  குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை பதினான்காம் லியோ ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி, போர் தொடுப்பவர்களின் செபங்களை இயேசு ஏற்பதில்லை என்ற திருத்தந்தையின் கருத்தை எடுத்துக்காட்டினார்.

அதேசமயம், திருத்தந்தையின் இந்த ஆழமான கருத்திற்குப் பதில் அளித்த பலர், வன்முறையைத் தவிர்க்க முயலாமல் "நியாயமான போர்க் கோட்பாட்டிற்கு" (Just War Theory) அதிக முக்கியத்துவம் அளிப்பது குறித்து  தனது கவலையை வெளிப்படுத்தினார்.

மேலும் இத்தகைய கருத்துக்கள் அறநெறி உண்மையை கண்டறிவதற்கு பதிலாக, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மோதல்களை நியாயப்படுத்தும் முயற்சியாக மாறிவிடும் என்றும் எச்சரித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸின் 'மகிழ்ந்து களிகூருங்கள்' (Gaudete et Exsultate) என்ற திருத்தூது மடலை மையமாக வைத்து, அமைதியை நிலைநாட்டத் தேவையான நான்கு அடிப்படைப் பண்புகளான அமைதி, படைப்பாற்றல், உணர்திறன், திறமைகள்  ஆகியவற்றை கர்தினால் Cupich அவர்கள் எடுத்துரைத்தார்:

அமைதி என்பது மோதல்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அவற்றை நீதியின் மூலம் ஆக்கப்பூர்வமாக மாற்றுவதாகும் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் Cupich அவர்கள், போர் ஒரு விளையாட்டாகக் கருதப்படும் நவீனச் சூழலில், எதிரியிடமும் மனித மாண்பைக் காணும் உணர்திறன் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியில், அமைதி என்பது வெறும் இலக்கல்ல; அது ஒழுக்கம், தியாகம் மற்றும் பொறுமை தேவைப்படும் ஒரு நுட்பமான கலை என்று எடுத்துக்காட்டி தனது உரையை கர்தினால் குப்பிச் அவர்கள் நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2026, 13:47