தேடுதல்

இறைவேண்டல் செய்யும் மியான்மார் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்யும் மியான்மார் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்   (Cardinal Charles Maung Bo of Myanmar)

மியான்மாரில் அமைதி நிலவ விசுவாசிகளுக்கு அழைப்பு!

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், மியான்மார் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலும் அமைதி நிலவ வேண்டி இறைவேண்டல் செய்யுமாறு அறிக்கையொன்றில் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர் மியான்மார் ஆயர் பேரவை.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மார்ச் 26, வியாழனன்று ஒரு நாள் இறைவேண்டல், தவம் மற்றும் நோன்பைக்  கடைப்பிடிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள்.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், மியான்மார் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலும் அமைதி நிலவ வேண்டி இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர் அதன் ஆயர்கள்.

மியான்மார் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், "தவக்காலம் என்பது மனமாற்றம், இறைவேண்டல், நோன்பு மற்றும் பிறரன்புப் பணிகளுக்கான ஒரு காலமாகும்" என்பதை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள ஆயர்கள், "அன்பு, இரக்கம் மற்றும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலமே அமைதி கட்டியெழுப்பப்படுகிறது" என்றும், "உலகிலும் மியான்மாரிலும் நல்லிணக்கம் மற்றும் ஒன்றிப்பு நிலவிட வேண்டுமெனத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுங்கள்" என்றும் விசுவாகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2026, 13:07