ஆயர் ஜெரோம் தாஸ் வருவேல் ஆயர் ஜெரோம் தாஸ் வருவேல்  

ஆயர் ஜெரோம் தாஸ் வருவேல் இறைபதமடைந்தார்!

பத்தாண்டு கால தனது பணியில் தொன் போஸ்கோவின் சலேசிய சபையில் பங்குப் பணிகள், கல்வி மற்றும் தலைமைப் பொறுப்புகளை வகித்த அவர், தென்னிந்திய தலத்திருஅவையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தமிழ் நாட்டிலுள்ள குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் சலேசிய சபையைச் சேர்ந்த ஜெரோம் தாஸ் வருவேல் அவர்கள், மார்ச் 24, செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் அதிகாலை 1.30 மணியளவில் இறைபதமடைந்தார்.

மறதி நோய் மற்றும் நடுக்குவாதம் தொடர்பான சிக்கல்களுடன் போராடி வந்த ஆயர் ஜெரோம் தாஸ் வருவேல் அவர்கள், ஏழைகளின் சகோதரிகளின் பராமரிப்பு இல்லத்தில் இறைபதமடைந்தார்.

ஆயரின் இறுதிச் சடங்கு மார்ச் 25, புதன்கிழமையன்று, குழித்துறையில் உள்ள தூய்மைமிகு மூவொரு கடவுளின் பேராலயத்தில் இடம்பெற்றது. இதில் எண்ணற்ற அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும், பொதுநிலை விசுவாசிகளும் கலந்துகொண்டனர்.

முன்னதாக மார்ச் 23, செவ்வாய்க்கிழமையன்று, சென்னை பெரம்பூரிலுள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்தில் அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

1951-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த ஆயர் வருவேல், 1985-ஆம் ஆண்டில்  திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2015-ஆம் ஆண்டில் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்று, உடல்நலக்குறைவு காரணமாக 2020-ஆம் ஆண்டு தனது பதவியைத் துறக்கும் வரை பணியாற்றினார்.

பத்தாண்டு கால தனது பணியில் தொன் போஸ்கோவின் சலேசிய சபையில் பங்குப் பணிகள், கல்வி மற்றும் தலைமைப் பொறுப்புகளை வகித்த அவர், தென்னிந்திய தலத்திருஅவையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2026, 14:35