படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை : இறைவார்த்தையைக் கேட்டு....

உறவுகள் எனச் சொல்லி உலை வைப்பவர்களைவிட உறவையும் ஊதியத்தையும் ஏன் உயிரையும் பெரிதெனக் கருதாமல் அவரின் வார்த்தைகளைக் கேட்டு அவரோடு நடந்த பாமரச் சீடர்களை உறவில் பெரியவர்களெனக் எனக் கருதினார் இயேசு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று இயேசுவுக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார் (லூக் 8:20-21)

பணிவாழ்வில் ஈடுபடுவோர் தங்கள் குடும்பங்களில் இருந்து பெறும் அனுபவங்கள் பல. சில குடும்பங்கள் உந்து சக்தியாகவும், சில ஈர்ப்பு சக்தியாகவும், சில ஒட்டுண்ணியாகவும், சில தடைக்கற்கள் போலவும் செயல்படும். இயேசுவைப் பற்றி நல்ல செய்தி எதுவும் அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லைதான். என்றாலும் இயேசுவின் சில தூரத்து உறவினர் அவர் தாய் மரியாவுடன் வந்து அவரைச் சந்திக்க விரும்பினர். இயேசுவின் பணிகள் நிச்சயமாக அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கக் கூடும்.

உதிர உறவுகளைவிட பணி உறவுகளுக்கே இயேசு முதன்மை கொடுத்தார். உறவுகள் எனச் சொல்லி உலை வைப்பவர்களைவிட உறவையும் ஊதியத்தையும்  ஏன் உயிரையும் பெரிதெனக் கருதாமல் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரோடு நடந்த பாமரச் சீடர்களை உறவில் பெரியவர்களெனக் கருதினார். இறைவார்த்தையைக் கையில் அல்ல; இதயத்தில் சுமந்து எங்கும் எச்சூழலிலும் வாழ்வாக்குபவரே தம் சீடர் என்பதுவே இயேசுவின் பாசப் பதில்

இறைவா! நான் உமக்கு வார்த்தையால் அல்ல; வாழ்க்கையால் உறவாகிட வரம் தாரும்.

"உம் வாக்கின் வழியிலே"  என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனெடிக் M.D. ஆனலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 பிப்ரவரி 2026, 13:43