தேடுதல்

ஹாங்காங் மறைமாவட்டத்தின் 80-வது ஆண்டு நிறைவு விழாவில் கர்தினால் தாக்லே ஹாங்காங் மறைமாவட்டத்தின் 80-வது ஆண்டு நிறைவு விழாவில் கர்தினால் தாக்லே 

ஹாங்காங் மறைமாவட்டத்தின் 80-வது ஆண்டு நிறைவு விழா!

ஜனவரி 18, ஞாயிறன்று, ஹாங்காங் மறைமாவட்டத்தில் நடைபெற்ற அதன் 80-வது ஆண்டு நிறைவு விழாவில் இறைவேண்டல் மற்றும் இசை நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹாங்காங் மறைமாவட்டத்தின் 80-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனவரி 18,ஞாயிறன்று இடம்பெற்ற இறைவேண்டல் மற்றும் இசை நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

ஹாங்காங்கின் சாட்டர் தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கர்தினால் ஸ்டீபன் சௌ சா-யானுடன் இணைந்து, இறைவார்த்தையின் அடிப்படையில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு அந்நகரத்திற்குத் தனது ஆசீரை வழங்கினார் கர்தினால் தாக்லே.

இயேசுவின் தூய்மைமிகு முகத்தை இறுதி ஆசீராக எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூகத்திற்கு ஆசீர்வாதமாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

பிலிப்பீன்ஸ் மறைமாவட்ட மேய்ப்புப் பணி மையத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தார் கர்தினால் தாக்லே. மேலும் ஹாங்காங்கில் குறிப்பிடத்தக்க பிலிப்பீன்ஸ் சமூகத்தினர் இந்தக் கொண்டாட்டத்தில் பேரார்வமுடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் கான்டோனீஸ், பிலிப்பீன்ஸ் மற்றும் மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகளில் இறைவேண்டல்கள் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜனவரி 2026, 13:03