தேடுதல்

பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் உரையாடலில் இணையும் இளையோர் பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் உரையாடலில் இணையும் இளையோர்   (Universidad de Salamanca)

அமைதி என்பது நாம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒரு தேர்வு

"இளைஞர்கள் வெறும் அமைதியைப் பெறுபவர்களாக மட்டுமே இருக்க விரும்பவில்லை; அதைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் அதிகமான ஒரு பங்களிப்பை கொடுக்க விரும்புகின்றனர்" : பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் இளையோர் மன்றம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அமைதி என்பது நாம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒரு தேர்வு என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அமைதி என்பது ஆயுதங்களற்ற ஒன்று, அது செயல்திறமுடையது மற்றும் வன்முறையற்றது. நற்செய்தியின் செய்தி வெறும் வார்த்தைகள் மூலம் அல்ல, செயல்கள் மூலம் அமைதியைக் கொண்டு வருவதாகும்” என்று கூறியுள்ளது பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் இளையோர் மன்றம்.

இந்த வார்த்தைகளுடன், 2025 உலக ஒன்றுகூடலின் போது உருவாக்கப்பட்ட பாக்ஸ் கிறிஸ்டி இளையோர் மன்றத்தின் இளைஞர்கள், உலக அமைதி நாளை முன்னிட்டு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கியுள்ள செய்திக்கு பதிலளிக்க முனைந்துள்ளனர்.

வரும் மாதங்களில், புதிதாக நிறுவப்பட்ட இந்த இளையோர் மன்றம், இளைஞர் கண்ணோட்டத்தில் பாக்ஸ் கிறிஸ்டி என்ற அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் பணியை முன்னெடுத்துச் செல்ல ஒன்றிணைந்து செயல்படும் என்றும், அகிம்சைக்கான பாலங்கள் மற்றும் செயல்முறைகளை உருவாக்குவதில் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்கள் வெறும் அமைதியைப் பெறுபவர்களாக மட்டுமே இருக்க விரும்பவில்லை; அதைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் அதிகமான ஒரு பங்களிப்பை கொடுக்க விரும்புகின்றனர் என்றும் மன்றம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜனவரி 2026, 13:21