தேடுதல்

புனித பூமி புனித பூமி  

புனித பூமி மக்கள் சம உரிமைகள் பெறவேண்டும்!

புனித பூமி ஒருங்கிணைப்புக் குழுவைச் (HLC) சார்ந்த கத்தோலிக்க ஆயர்கள் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் மனித மாண்பு, உரையாடல் மற்றும் அமைதியை நிலைநாட்ட அழைப்புவிடுத்துள்ளனர்.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

புனித பூமி ஒருங்கிணைப்புக் குழுவைச் (HLC)  சார்ந்த கத்தோலிக்க ஆயர்கள் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் மனித மாண்பு, உரையாடல் மற்றும் அமைதியை நிலைநாட்ட அழைப்புவிடுத்துள்ளனர்

ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களை உள்ளடக்கிய குழுவான புனித பூமி ஒருங்கிணைப்புக் குழு (HLC), ஜனவரி 17 முதல் 21 வரை புனித பூமிக்கு தங்களது ஆண்டுத் திருப்பயணத்தை மேற்கொண்ட வேளை, இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 22, புதன்கிழைமை அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், குறிப்பாக, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையோர பகுதிகளில் தொடரும் வன்முறையின் காரணமாக துன்புறும் மக்களுடன் தோழமையை வெளிப்படுத்த வேண்டும் என ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக, பெடோயின் மற்றும் கிறிஸ்தவச் சமூகத்தினரிடையே, கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், குடியேற்ற வன்முறை, நிலம் பறிமுதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்த தகவல்களைக் தாங்கள் கேட்டறிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புனித பூமி ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆயர்கள் இஸ்ரேல் நாடு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த நிலையில் இருப்பதற்கான உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என உறுதியாக கூறியதோடு, இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கப் பெறவும், வன்முறை, பயங்கரவாதத்திற்கு முடிவு, மற்றும் இரு-நாடுகளுக்கு இடையேயான தீர்வுக்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்

மேலும் ஆயர்கள் இவ்விரு அரசுகளும் அனைத்துலகச் சட்டத்தை நிலைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதுடன், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் நீதி, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுப்பவர்களுக்கும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2026, 13:49