தேடுதல்

காசா முழுமையான பேரழிவை எதிர்கொண்டு வருகிறது!

மனித வாழ்க்கை, மாண்பு மற்றும் நீதிக்கான மனிதனின் தேடலை எந்த சூழலிலும் மறுக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி ஈரானின் வன்முறைக்கு எதிராக தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் கர்தினால் பியெர்பத்திஸ்தா பித்தசபாலா.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் வன்முறை அதிகரிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா

ஜனவரி 13, செவ்வாயன்று, ஜோர்டானில் வத்திக்கான் செய்திகளிடம்  பேசியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால்  பிட்சபாலா அவர்கள், "மனித வாழ்க்கை, மாண்பு மற்றும் நீதிக்கான மனிதனின் தேடலை எந்த சூழலிலும் மறுக்கக்கூடாது" என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

ஈரானில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கொடிய போராட்டங்களைக் குறிப்பிட்ட கர்தினால்  பிட்சபாலா அவர்கள், போராட்டங்களை விடுத்து மனித மாண்புக்கான மரியாதையைப் பேணுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும்  காசாவில் கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கபட்டடிருந்த போதிலும், அங்கு தாக்குதல்கள் தொடர்வதாகவும், மருந்துப் பற்றாக்குறை மற்றும் கடுமையான குளிர்காலச் சூழல் நிலவுவதாகவும் கவலை தெரிவித்துள்ள கர்தினால் பிட்சபாலா அவர்கள், மேற்குக் கரையில் மோசமடைந்து வரும் கட்டுப்பாடுகள் மற்றும் குடியேற்றத்தாரர்கள் மீதான வன்முறை குறித்தும் விவரித்தார்.

ஜோர்டானில் அருள்பணியாளர்களைச் சந்தித்தபோது, பாலஸ்தீனியர்களுக்கான அந்நாட்டின் ஆதரவைப் பாராட்டி, கல்வி மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்க உரையாடலுக்கான திருஅவையின்  அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார் கர்தினால்  பிட்சபாலா.

பல்வேறு பகுதிகளில் இன்னும் நிலைத்தன்மை இல்லாத போதிலும், புனித பூமிக்குத் மீண்டும் திருப்பயணம் மேற்கொள்ளும்படி திருப்பயணிகளை கேட்டுக்கொண்ட கர்தினால்  பிட்சபாலா அவர்கள்,  ஏனென்றால், நமது ஆழமான நம்பிக்கைக்கு இது "ஐந்தாவது நற்செய்தி" என்றும்  சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2026, 14:42