தேடுதல்

திருவிவிலியம் திருவிவிலியம்  

தடம் தந்த தகைமை : விதை, இறைவார்த்தை

இறக்கும் நம்மை இறவாது வாழச் செய்வதே இறைவார்த்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விதை, இறைவார்த்தை (லூக் 8:11)

நம் வார்த்தை வலிமையும் வல்லமையும் உள்ளது. வார்த்தை வாழ்வைத் தரவல்லது போல் வீழ்வையும் தரவல்லது. வார்த்தைகளே வரலாற்றை வரையறுக்கின்றன. வார்த்தையே மனிதருக்கிடையே, நாடுகளுக்கிடையே இணக்கத்தையும் பிணக்கத்தையும் உருவாக்குகின்றன. மனிதரின் வார்த்தையே இத்தகையது என்றால் கடவுளின் வார்த்தை எத்தகையது என்று எண்ணி வியந்திடலாம். இறைவார்த்தை என்னும் விதையாலே இப்பிரபஞ்சம் விருட்சமானது என்பதை விவிலியம் விவரிக்கின்றது.

இறைவார்த்தை உயிருள்ளது. எல்லா வார்த்தைகளுக்கும் உயிரூட்டுவது. அரவணைப்பதும் ஆத்திரப்படுத்துவதும் அதுவே. இறங்குவதும் ஈனர்களை எச்சரிப்பதும் அதுவே. உணர்வூட்டுவதும் ஊதாரித்தனங்களை எதிர்ப்பதும் அதுவே. அது இறைவாக்கினர்கள், சமூகத் தலைவர்கள், சான்றோர் என்ற வரிசையில் இயற்கையின் ஊடாகவும் நம்மோடு உறவாடுகின்றது. அந்த இறைவார்த்தை என்னும் விதையை இதயத்துள் விதைத்தால் இணையற்ற செயல்கள் செய்யலாம் இகத்துள் இறைவனோடு.

இறைவா! உம் வார்த்தை எனும் விதை என் இதய நிலத்தில் விழுவதே, நான் பெறும் பேரு. அப்பேற்றில் பயணிக்கப் பலம் தாரும்

"உம் வாக்கின் வழியிலே" என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனெடிக் M.D. ஆனலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜனவரி 2026, 12:52