தடம் தந்த தகைமை : தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி...
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது" (யோவா 3:4-5)
நிக்கதேமுவுக்கு இயேசு சொன்ன மறுபிறப்பு வெறுமனே உடலியல் சார்ந்ததன்று. அது உளவியல் சார்ந்தது. இயேசுவின் மறுபிறப்பு பற்றிய பார்வையை வெறும் வார்த்தைப் பொருளாகப் பார்த்தார். அது வாழ்க்கைப் பொருளாகப் பார்க்கப்படவேண்டியது. ஆதவன் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கின்றது. ஒரே ஆதவன்தான், ஆனால் அது ஒவ்வொரு நாளும் அது வீசும் ஒளிக்கீற்றுகள் பிரசவிக்கும் சக்தி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் உயிரூட்டுகின்றதல்லவா? அவ்வாறே ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆதவனாக வேண்டும்.
ஒவ்வொரு துளி தண்ணீரும் உயிரளிக்கும் உத்வேகம் கொண்டது. அது வாழ்வளிக்கும் சக்திமிக்கது. அவ்வாறே தூய ஆவியார் நல்லனவற்றை எண்ணவும், சொல்லவும், செய்யவும் வல்லமை வழங்குபவர். தண்ணீரின் சக்தியும் தூய ஆவியாரின் வல்லமையும் ஒருவரை ஆட்கொள்ளும்போது, அவர் புதிதாய்ப் பிறக்கிறார். அது வெறும் உடல்சார்ந்த பிறப்பல்ல; புத்துணர்வும், புதுப்பார்வையும், புதுச்செயல்பாடுகளும் சூழ்ந்த புதுப்பிறப்பு. அதுவே, இயேசு விரும்பும் இறையாட்சி. அந்த ஆட்சிக்குள் அகிலம் அனுதினமும் இயங்க வேண்டும் என்பதே இயேசுவின் கனவு.
இறைவா, நீர் ஒவ்வொரு நொடியும் இந்த உலகைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றீர். அதோடு என்னையும்தான் என்றுணர வரம் அருளும்.
"உம் வாக்கின் வழியிலே" என்னும் நூலிலிருந்து அருள்பணி. பெனடிக்ட் M.D. ஆனலின்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்