தடம் தந்த தகைமை : விண்ணரசின் மறைபொருளை அறிய ...
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை" (மத் 13:11)
எக்கொள்கையாயினும் அதைப் புரியவைத்து வாழத் தூண்டுவதே நல்ல போதக யுக்தி. இயேசுவுக்குள் அந்த நல்லுணர்வு நிறையவே இருந்தது. தாம் சந்தித்தவர்களாயினும், தம்மைச் சந்திக்க வந்தவர்களாயினும் அவர்கள் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப இறையாட்சியின் விழுமிய விதைகளை எளிய பாணியில் விதைத்தார். அவரது நோக்கமெல்லாம் மக்களை ஒடுக்கிய மரபுத்தளைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதே.
ஒருவரோடு நெருங்கிப் பழகப் பழக அவரை நன்றாகக் புரிந்துகொள்ளலாம். சரியான உறவும் உரையாடலுமின்றி ஒருவரைச் சரியாகப் புரிந்திட முடியாது. இயேசுவை அண்டி வந்து அவரது அமுத மொழிகளைக் கேட்டவர்கள் வாழ்வு மாற்றப் பாதையைத் தேர்ந்தனர். தூரமாய் நின்றவர்கள் அவரை உலகிலிருந்தே மாற்ற முனைந்தனர். நம்மில் பலரைப் புரியாமலே நாம் தூவும் புழுதிகள் எழுதி முடியா.
‘உம் வாக்கின் வழியிலே’ என்ற நூலிலிருந்து அருள்பணி. பெனடிக்ட் M.D. ஆனலின்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்