தேடுதல்

வங்கதேசத்தில் பதற்ற நிலை வங்கதேசத்தில் பதற்ற நிலை   (ANSA)

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலையால் பதற்றம்!

கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் நிலையில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலையால் நிலவிரும் பதற்றமான சூழலில் நாட்டின் அமைதிக்காக கிறிஸ்தவ மக்களை இறைவேண்டல் செய்யுமாறு டாக்காவின் துணை ஆயர் சுப்ரோட்டோ போனிஃபேஸ் கோம்ஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

வங்கதேசத்தில் டிசம்பர் 12, வெள்ளியன்று, 32 வயதான மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைதியின்மையும் தொடர்ந்து அதிகரித்தவரும் பதற்றங்கள் குறித்தும் டாக்காவின் துணை ஆயர் சுப்ரோட்டோ போனிஃபேஸ் கோம்ஸ் அவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளார்.

மேலும் மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாக்கா மற்றும் பிற நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன என்றும் ICN எனப்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வன்முறை இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் வரவிருக்கும் தேசிய தேர்தல்களைப்  பாதிக்கக்கூடும் என்றும் கூறும் அச்செய்தி நிறுவனம், குறிப்பாக மதச் சிறுபான்மையினரான  கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் சூழல் அதிகரித்திருப்பதாக டாக்காவின் துணை ஆயர் கோம்ஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய பல நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் பலர்மீதான விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைதியை நிலைநாட்ட அரசு ஒரு நாள் தேசிய துக்கதினத்தை அறிவித்துள்ளது.

கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் நிலையில் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பதால் நாட்டின் அமைதிக்காக கிறிஸ்தவ மக்களை இறைவேண்டல் செய்யுமாறு துணை ஆயர் கோம்ஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிசம்பர் 12, வெள்ளியன்று,  32 வயதான மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி முகமூடி அணிந்த நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு மாற்றப்பட்ட பின்னர் டிசம்பர் 19, வெள்ளியன்று, சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் போராட்டங்கள் வெடித்து அந்நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 டிசம்பர் 2025, 12:50