தேடுதல்

நீதிக்காகக் குரல் கொடுக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் நீதிக்காகக் குரல் கொடுக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் இருந்து கிறிஸ்தவர் விடுதலை!

பாகிஸ்தானில் கடுமையான அழுத்தம் மற்றும் வன்முறை ஆபத்து நிலவியபோதிலும், "தி வாய்ஸ்" என்ற சட்டக் குழு ஹாரூன் ஷெஹ்சாத்தை ஆதரித்ததன் விளைவாக, அவர் இறுதியில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானின் சர்கோதாவைச் சேர்ந்த 49 வயது நிரம்பிய கிறிஸ்தவரான ஹாரூன் ஷெஹ்சாத் என்பவர், கடந்த இரண்டு ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 8, சனிக்கிழமையன்று, தெய்வ நிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அங்குக் கடுமையான அழுத்தம் மற்றும் வன்முறை ஆபத்து நிலவியபோதிலும், "தி வாய்ஸ்" என்ற சட்டக் குழு ஷெஹ்சாத்தை ஆதரித்ததன் விளைவாக, அவர் இறுதியில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் இப்போது விடுதலை அடைந்திருந்தாலும், தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய ஒரு மதச் சிறுபான்மையினர் சமூகத்தில் இருப்பதால் அவரது பாதுகாப்பு குறித்த கவலைகள் இன்னும் இருக்கின்றன என்றும் இதுகுறித்த செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் முகநூலில் திருவிலியத்தின் ஓர் இறைவசனத்தை வெளியிட்டதற்காக அவர் இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். உள்ளூர் முஸ்லிம் ஒருவர் இஸ்லாமிய விடுமுறையான ஈத்-உல்-அழ்ஹாவை அவமதிப்பதாக தவறாகப் புரிந்து கொண்ட இந்தப் பதிவு, ஷெஹ்சாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 நவம்பர் 2025, 12:18