குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி மக்கள் கூட்டம்  

டெல்லி குண்டு வெடிப்பு : தேசிய ஒற்றுமைக்கு ஆயர்கள் அழைப்பு!

"நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் இருப்போம், அமைதியைப் பேணுவோம், மேலும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒத்துழைப்போம் என்றும், நம் நாட்டில் அமைதி நிலவவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம்" : இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை

ஜான்சி ராணி அருளாந்து

நவம்பர் 10, இத்திங்கள்கிழமையன்று  புது டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் நிகழ்ந்த கார் குண்டு வெடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்களை இந்திய காவல்துறை காஷ்மீரில் கைது செய்துள்ளமைக்கு இந்திய ஆயர் பேரவை வரவேற்றுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் குறைந்தது ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லியின் புறநகரில் உள்ள ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதப் பிரிவு  ஒன்றையும் காவல்துறை முறியடித்ததோடு அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் பொருட்களையும் கைப்பற்றியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை  உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், மக்களை விழித்திருந்து இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது என்பதையும் அந்நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

"நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் இருப்போம், அமைதியைப் பேணுவோம், மேலும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒத்துழைப்போம் என்றும், நம் நாட்டில் அமைதி நிலவவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை  கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2025, 15:15