தேடுதல்

கனானேயப் பெண்ணுக்கு நலமளிக்கும் இயேசு கனானேயப் பெண்ணுக்கு நலமளிக்கும் இயேசு  

தடம் தந்த தகைமை : இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது

விளம்பரம் தீவினைகளின் தொடக்கம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரகசிய காப்பு இன்று அதிசயமாகிவிட்டது. இயேவின் உயிரளிப்புச் செயல் ஓர் அறைக்குள் நிகழ்ந்தாலும் அந்த ஊரும் உறவுகளும் சூழ்ந்தே இருந்தன. ஆயினும் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார். அவர் ஏனைய மந்திர வித்தைக்காரர்களைப் போல மாயாஜாலம் செய்து உயிரளிக்கவில்லை. மானுடத்தின்மீதான கடவுளின் இரக்கம், சிறுமி மீதான தனது பரிவு, அவளது பெற்றோரின் நம்பிக்கை என எல்லாம் சிறுமியின் மீள் உயிரானது.

மிகச் சிரியவற்றிற்கு மிகப்பெரிய விளம்பரம் வழங்கும் உலகிது. ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டு தன் பெயர் இல்லையே, தன்னை அரங்கில் சொல்லவோ, அழைத்து மாலை போராடவோ இல்லையே, தன் பெயரைக் கல்வெட்டில் பதிக்கவில்லையே  எனத் தன்னை முன்னிறுத்தி விளம்பரம் தேடுவோரின் மத்தியில் இயேசு ஒரு மாற்றுச் சித்தாந்தத்தைக் கற்றுக்கொடுத்தார். விளம்பரமற்ற உலகிற்குள் மனிதம் நுழைகையில் மகத்துவங்கள்  நிகழும்.

இறைவா! என்னில் உள்ளது எல்லாம் உம்மிடமிருந்து பெற்றது. அதைப் பகிர்கையில் என்னை முன்னிறுத்தாத உணர்வைத் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 நவம்பர் 2025, 15:51