தெற்கு சூடான் கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு தெற்கு சூடான் கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு  

தென் சூடானில் அமைதி நிலவிட கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு வேண்டுகோள்!

தெற்கு சூடானில் அமைதி நிலவிட உதிவிடுமாறு கென்யா அதிபரிடம் தெற்கு சூடான் கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு (SSCC) வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தெற்கு சூடானின் கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு (SSCC) நவம்பர் 18, இச்செவ்வாயன்று, கென்ய அரசுத் தலைவர் வில்லியம் ரூட்டோ அவர்களைச் சந்தித்து, அந்நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதில் அவரது ஆதரவைக் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் பலவீனமான நிலை மற்றும் அரசுத் தலைவர் சல்வா கீர் மற்றும் முன்னாள் துணை அரசுத் தலைவர் ரீக் மச்சாருக்கு விசுவாசமான படைகளுக்கு இடையேயான அண்மைய வன்முறை மோதல்கள் குறித்தும்  எடுத்துக்காட்டிய அவ்வமைப்பு அதேவேளை, இம்மோதல்கள் ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து  உள்நாட்டில் பதட்டங்களைத் தூண்டின என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இரு தலைவர்களையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர உதவுமாறு கென்யாவை வலியுறுத்தியது அக்கூட்டமைப்பு என்று தெரிவிக்கும் அச்செய்தி நிறுவனம், மறுபுறம் மாநிலத்தில் அமைதி, உறுதித்தன்மை மற்றும் தெற்கு சூடானின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான கென்யாவின் உறுதிப்பாட்டை அரசுத் தலைவர் ரூட்டோ அவர்கள் உறுதிப்படுத்தினார் என்றும் உரைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 நவம்பர் 2025, 14:30