தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  (AFP or licensors)

பல்சுவை –நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் - அனைவரும் உடன் பிறந்தோர் - 3

போர், அரசியல் மற்றும், மனித சமுதாயத்தின் தோல்வி. அது, தீமையின் சக்திகளின் முன்பாக வேதனையளிக்கும் தோல்வி என்று போர் குறித்த தனது கருத்துக்களை அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலில் அதிகமாக வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்முனைவர் கசி இராயப்பா

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் குறித்தக் கருத்துக்களை நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் என்ற தலைப்பில் நாம் கடந்த சில வாரங்களாக அறிந்து வருகின்றோம். அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடல் குறித்தக் கருத்துக்களின் இரண்டு பகுதிகளைக் கடந்த வாரத்தில் அறிந்துகொண்ட  நாம் இன்று அதன் இருதிப்பகுதி குறித்தக் கருத்துக்களை காணலாம்.

உலக அளவில் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும், இதில் கொலைசெய்பவரும், தனது மாண்பை இழக்கிறார், மனிதரின் மாண்பு கடவுள் வழங்கிய கொடை. போர், கடந்த கால வரலாற்றிலிருந்து வெளிவருகின்ற பூதம் அல்ல, மாறாக, அது தொடர்ந்த அச்சுறுத்தலாக, அனைத்து உரிமைகளும் புறக்கணிப்படுவதையும் குறித்து நிற்கின்றது. போர், அரசியல் மற்றும், மனித சமுதாயத்தின் தோல்வி. அது, தீமையின் சக்திகளின் முன்பாக வேதனையளிக்கும் தோல்வி என்று போர் குறித்த தனது கருத்துக்களை இத்திருமடல் அதிகமாக வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் பயன்படுத்தப்படும் வேதிய மற்றும், உயிரியல் ஆயுதங்கள், பல அப்பாவி குடிமக்களைத் தாக்குகின்றன. இதற்கு நியாயமும் சொல்லப்படுகின்றன. இதனால், இனிமேல் போரே வேண்டாம் என்று, நாம் மிக ஆவேசத்துடன் குரல் எழுப்ப வேண்டும். துண்டு துண்டாக இடம்பெறும் உலகப் போரை, நாம் அனுபவித்து வருகிறோம். போர்கள் எல்லாம், ஒன்றோடொன்று தொடர்புடையவை. அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியது, நன்னெறி மற்றும், மனிதாபிமானக் கடமையாகும் என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனைவரும் உடன்பிறந்தோரே என்ற திருமடல் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் கசி இராயப்பா. தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 அக்டோபர் 2025, 17:58