தேடுதல்

ஏழை மூதாட்டியை அரவணைக்கும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 05-07 -2015.Paraguay) ஏழை மூதாட்டியை அரவணைக்கும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 05-07 -2015.Paraguay) 

பல்சுவை – நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள்– அனைவரும் உடன் பிறந்தோரே- பகுதி -2

ஒருவர் மற்றவர் மீது நாம் காட்டும் சகோதரத்துவ உறவே வலிமை வாய்ந்தது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு அவர்தம் திருமடலில் சுட்டிக்காட்டுகின்றார்.
அருள்முனைவர். கசி இராயப்பா

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒவ்வொரு தனி மனிதரும் மற்றவர்களோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர். பிறரது துயரங்கள் மீது அக்கறையற்று வாழ இயலாது, ஒருவரும் தன் வாழ்வில் தீண்டத்தகாதவர் என்ற உணர்வுடன் வாழ்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது என்பன போன்ற கருத்துக்களை அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலில் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். மாறி வரும் இவ்வுலகில் ஒருவர் மற்றவரை உடன்பிறந்தவராக நண்பராக பார்க்க வேண்டியது மிக அவசியம். நம்மில் அன்பு என்ற ஒன்று இல்லையெனில் நம் அருகில் இருக்கும் அயலாரை அன்புடன் நம்மால் பார்க்க இயலாது. மாறாக வெறுப்பும் பகைமையுணர்வும் மேலோங்கி நாம் அனைவரும் மோதல்களையும் வன்முறைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவர் மற்றவர் மீது நாம் காட்டும் சகோதரத்துவ உறவே வலிமை வாய்ந்தது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு அவர்தம் திருமடலில் சுட்டிக்காட்டுகின்றார். இன்றைய நமது பல்சுவையில் திருத்தந்தையின் அனைவரும் உடன்பிறந்தோரே என்ற திருமடலின் கருத்துக்கள் குறித்த இரண்டாம் பகுதியினை நாம் காணலாம். இதனை வழங்குபவர் அருள்முனைவர் கசி இராயப்பா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 அக்டோபர் 2025, 13:06