தேடுதல்

அரசன் யோசபாத்து அரசன் யோசபாத்து  

தடம் தந்த தகைமை – யோசபாத்தின் சிறப்பு

யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா; அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை. பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர். யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்; யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நகர்களையும் கட்டினார். யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது; வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர்.

தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா; அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான். அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா; இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர். பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர். அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தனர். இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும், யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 அக்டோபர் 2025, 17:55